/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை இல்லாத பகுதி' பள்ளிகள் அருகே குறியீடு
/
புகையிலை இல்லாத பகுதி' பள்ளிகள் அருகே குறியீடு
ADDED : ஜூலை 10, 2025 01:08 AM
அரூர், புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, பள்ளிகளின் சுற்றுப்பகுதியில் புகையிலை இல்லாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பள்ளிகளை சுற்றி, 90 மீட்டர் வரை எந்த புகையிலை பொருட்கள் விற்பனையும் இருக்காத வகையில் பாதுகாப்பதற்கும், அதை அடையாளப்படுத்தும் வகையில், 'புகையிலை இல்லாத பகுதி' என குறியீடு போடுவதற்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்புள்ள, அரூர் - சேலம் பைபாஸ் சாலையில், பொதுமக்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புகையிலை இல்லாத பகுதியாக, மஞ்சள் நிறத்தில்
குறியீடு போடப்
பட்டுள்ளது.