ADDED : செப் 13, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி உழவர் சந்தையில், தக்காளி விலை சரிந்து ஒரு கிலோ, 14 ரூபாய் என விற்றது.
தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த, ஜூன், 7 அன்று ஒரு கிலோ தக்காளி, 45 ரூபாய் வெளிமார்க்கெட்டில், 55 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த மாதத்தில் அதிக மழை பெய்யாததால், தக்காளி வரத்து அதிகரித்தது. இதனால் அதன் விலை சரிந்து கடந்த, 6ல் ஒரு கிலோ தக்காளி, 18 ரூபாய் என விற்ற நிலையில், நேற்று மேலும் வலை சரிந்து ஒரு கிலோ, 14 ரூபாய்க்கு விற்றது. விவசாயிகளிடம், 6 முதல், 10 ரூபாய் வரை தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. விலை சரிவால் வேதனையடைந்த விவசாயிகள், தக்காளியை அறுவடை செய்யாமல், செடிகளிலேயே விட்டுள்ளதால், செடிகளில் தக்காளி காய்ந்து வருகிறது.