/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூர் கணவாய் 800 மீ., சாலையை மாற்றியமைக்க அதிகாரிகளிடம் கோரிக்கை
/
தொப்பூர் கணவாய் 800 மீ., சாலையை மாற்றியமைக்க அதிகாரிகளிடம் கோரிக்கை
தொப்பூர் கணவாய் 800 மீ., சாலையை மாற்றியமைக்க அதிகாரிகளிடம் கோரிக்கை
தொப்பூர் கணவாய் 800 மீ., சாலையை மாற்றியமைக்க அதிகாரிகளிடம் கோரிக்கை
ADDED : பிப் 28, 2024 02:39 AM
தர்மபுரி:தொப்பூர்
கணவாய் விபத்து பகுதி மற்றும் புதிதாக உயர் பாலம் கட்டப்படவுள்ள இடங்களை
தர்மபுரி, தி.மு.க., - எம்.பி.. செந்தில்குமார் பா.ம.க., - எம்.எல்.ஏ.,
வெங்கடேஸ்வரன் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தொப்பூர்
பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 8 கி.மீ., வனப்பகுதி
மற்றும் வளைவான சாலையால், தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன
ஓட்டிகள், மாவட்ட நிர்வாகம், எம்.பி., - எம்.எல்.ஏ., உட்பட அனைவரும் தொடர்
கோரிக்கை வைத்தோம்.
இதனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், தொப்பூர்
கணவாய் பகுதியில், புதிய உயர்மட்ட பாலம் அமைக்க அனுமதி அளித்தது. அதன்படி,
தொப்பூர் கட்டமேடு முதல் சேலம் மாவட்ட எல்லை பகுதி வரை, 6.60 கி.மீ.,
நீளத்தில், 775 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட டெண்டர்
அறிவிக்கப்பட்டது.
உயர்மட்ட பாலம் லோக்சபா தேர்தலுக்கு முன், அடிக்கல்
நாட்டி பணிகள் தொடங்கப்படும். உயர்மட்ட பாலம் அமைக்க, 3 ஆண்டு காலம் ஆகும்
என்பதால், அதுவரை விபத்தை தடுக்க, அபாயகரமாக உள்ள, 800 மீ., சாலையை மாற்றி
அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம்
கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

