ADDED : ஜூலை 22, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்:தர்மபுரி
மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சிக்கதிம்மன அள்ளியை சேர்ந்தவர்
கோவிந்தசாமி, 36. டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் மாலை, 5:00
மணிக்கு சிக்கதிம்மன அள்ளியை சேர்ந்த பழனி என்பவரது நிலத்தில்,
கோவிந்தசாமி டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்.
அப்போது, நிலத்திலிருந்த டிரான்ஸ்பார்மர்
அருகே, டிராக்டர் ஓட்டியபோது, ஒயர் அறுந்து டிராக்டர் மீது
விழுந்ததில், மின்சாரம் தாக்கி, கோவிந்தசாமி மயக்கமடைந்தார். அவரை
அக்கம், பக்கத்தினர் மீட்டு, காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். அங்கு, கோவிந்தசாமியை பரிசோதித்த மருத்துவர்,
ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து, காரிமங்கலம்
போலீசார் விசாரிக்கின்றனர்.
