கருத்து கேட்பு கூட்டம் நடத்த வலியுறுத்தி திரண்ட வணிகர்கள்
கருத்து கேட்பு கூட்டம் நடத்த வலியுறுத்தி திரண்ட வணிகர்கள்
ADDED : அக் 16, 2026 03:27 AM
தர்மபுரி: தர்மபுரியில் புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பஸ்கள் இயக்கம் தொடர்பாக மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து முடிவெடுக்க வேண்டுமென, வணிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடு த்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று தர்மபுரி மாவ ட்ட வணிகர்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவதாக தகவல் பரவியது.
இதில், பஸ் ஸ்டாண்ட் விவகாரத்தில் பலமுறை கோரிக்கை எழுப்பி வரும், எங்கள் தரப்பை தவிர்த்துவிட்டு, மற்ற வணிகர்களிடம் மட்டும் கருத்து கேட்புக்கூட்டம் நடத்துவதை ஏற்க மாட்டோம் எனக்கூறி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வணிகர்கள் திரண்டனர். இதையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில், அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அலுவலகம் திரும்பிய கலெக்டர் சரவணன், வணிகர்கள் தரப்பை அலுவலகத்துக்கு அழைத்து, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
