/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
/
அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 12, 2025 01:07 AM
பென்னாகரம் :பென்னாகரம் அடுத்த கடமடையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்தல் குறித்த, அட்மா திட்ட பயிற்சி நடந்தது.
வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை வேளாண்மை துணை இயக்குனர் இளங்கோவன் அவரது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண் உதவி இயக்குனர் வேல் முருகன் உரங்களின் பயன்பாட்டை குறைப்பது மற்றும் மண் பரிசோதனை செய்வதால் ஏற்படும் நன்மை குறித்து பேசினார்.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி இந்துமதி, வேளாண் சாகுபடியில் ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்து விளக்கினார். வேளாண் விற்பனை மற்றும் வணிக செயலாளர் அருள்மணி, உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன், உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் துறை சார்ந்து பேசினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அசோக்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் அஸ்வினி ஆகியோர் அட்மா திட்டங்கள் குறித்து விளக்கினர்.

