/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உடையும் அபாயத்தில் டிரான்ஸ்பார்மர் கம்பம்
/
உடையும் அபாயத்தில் டிரான்ஸ்பார்மர் கம்பம்
ADDED : ஜூலை 12, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, காட்டாகரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, வேடர்தட்டக்கல் பகுதியில் பிரகாசம் என்பவரின் விவசாய நிலத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.
இதிலுள்ள ஒரு கம்பத்தின் மேல் பகுதியில், 2 அடி அளவிற்கு சிமென்ட் பூச்சு உதிர்ந்து, வெறும் கம்பியின் மீது, மின் இணைப்பு உள்ளது. எந்த நேரத்திலும் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதி கம்பம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஏதேனும் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்மந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.