/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிராண வாயு பூங்காவில் மரக்கன்று நடும் விழா
/
பிராண வாயு பூங்காவில் மரக்கன்று நடும் விழா
ADDED : மார் 31, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, எ.ஜெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட அவ்வைவழி ரயில்வே கேட் பகுதியில், சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக, புதிதாக பிராணவாயு பூங்கா தொடங்கப்பட்டது.
இதில், பாளையம் சுங்கச்சாவடி சார்பில், மூங்கில், மகாகனி, பூவரசன், புங்கன் உட்பட, 20 வகையான, 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, பாளையம் சுங்கச்சாவடி திட்ட மேலாளர் நரேஷ் தலைமை வகித்தார். இதில், தனியார் செவிலியர் கல்லுாரி மாணவ, -மாணவியர், 150 பேர் பூங்காவில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

