நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில், 12,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வள்ளிமதுரை, கீரைப்-பட்டி, அச்சல்வாடி, கீழ்மொரப்பூர் பகுதிகளில் அதிகளவில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அரூர் பகுதியில் விளையும் மஞ்சள் பெருமளவில் சேலம் மற்றும் ஈரோட்டிலுள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஒரு குவிண்டால் மஞ்சள், 13,000 முதல், 14,500 ரூபாய் வரை விற்பனையாவதாக தெரிவித்த விவசாயிகள், சமீபத்தில் பெஞ்சல் புயலால் பெய்த மழையில் சாகுபடி செய்த பரப்பில், பாதிக்கும் மேல் மஞ்சள் அழுகி விட்டது, என்றனர்.