/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.60.58 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
/
ரூ.60.58 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
ADDED : மே 04, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், 146 விவசாயிகள், 800 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக, 14,579 ரூபாய், குறைந்தபட்சமாக, 11,299 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், கிழங்கு மஞ்சள் ஒரு குவிண்டால், அதிகபட்சமாக, 12,769 ரூபாய், குறைந்தபட்சமாக, 11,099 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 800 மூட்டை மஞ்சள், 60.58 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.