ADDED : மே 15, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டை, நவரோஜி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 32. இவர் திருப்பத்துாரில் வனச்சரகத்திற்கு உட்பட்ட வாணியம்பாடியில் வனவராக பணியாற்றி வந்தார்.
அதே பகுதியில் வன காப்பாளரான பணியாற்றியவர் திவாகர், 27. இருவரும் நேற்று மாலை, 6:00 மணிக்கு ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், கொடமாண்டப்பட்டி பிரிவுசாலையை கடந்து சென்றனர்.
அப்போது, பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலை சென்ற கர்நாடக அரசு பஸ், அவர்கள் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன், திவாகர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.