/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி
/
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி
ADDED : டிச 29, 2024 12:52 AM
தர்மபுரி, டிச. 29-
தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த ஈ.கே.புதூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் பார்த்திபன்,35; வலிப்பு நோய்க்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் பழைய இண்டூர் அடுத்த, பாறைகொட்டாய் மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் காலை, 10:00 மணிக்கு பைப்லைன் அமைப்பதற்காக கிணற்றின் ஓரம் சென்றபோது, வலிப்பு வந்து பார்த்திபன் கிணற்றில் தவறி விழுந்தார். தீயணைப்புத் துறையினர் வெங்கடேசனை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், தர்மபுரி மாவ ட்டம், காரிமங்கலம் தாலுகா, கேத்தனஹள்ளியை சேர்ந்த சத்தியவேணி, 12. இவர் செல்லியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், 8 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு சத்தியவேணி அவரது தங்கை தம்பியுடன் தும்பலஹள்ளி அணைக்கு குளிக்க சென்றார். அங்கு நீரில் மூழ்கிய சத்தியவேணியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். மயக்க நிலையில் இருந்தவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காரிமங்கலம் போலீசார்
விசாரிக்கின்றனர்.