/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
/
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : நவ 08, 2025 03:59 AM
தர்மபுரி: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசா-யிகள் வலியுறுத்தினர்.
தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சேர்ந்த, விவசாயிகளின் குறைதீர் கூட்டம் தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
ஆர்.டி.ஓ., காயத்ரி தலைமை வகித்தார். இதில், விவசாய சங்க பிரதிநிகள், விவசாயிகள் பேசுகையில், விவசாயிகளுக்கு மானிய விலையில், சோலார் பம்ப் செட்டுகள் வழங்க வேண்டும். தடுப்-பணை, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுகளை கொட்-டுவதை தடுக்க வேண்டும். மழைநீர் வீணாவதை தடுக்க, நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றி, ஏரி, குளங்களில் அதிக நீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீன்பாசி குத்தகை தொடர்பாக, பொதுப்பணித்துறை வெளிப்-படை தன்மையை கடைபிடிக்க வேண்டும். கொண்டகரஅள்ளி அருகில் உள்ள ஜாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய ஆர்.டி.ஓ., காயத்ரி 'விவசா-யிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்-படும்' என்றார்.

