/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய வங்கி கிளை துவங்க கிராம மக்கள் வேண்டுகோள்
/
புதிய வங்கி கிளை துவங்க கிராம மக்கள் வேண்டுகோள்
ADDED : அக் 13, 2024 08:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த தாளநத்தம் ஊராட்சியில், நொச்சிக்குட்டை, அய்யம்பட்டி, தாளநத்தம்,
காவேரிபுரம் உட்பட, 7 கிராமங்கள் உள்ளன. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
சுற்று-வட்டாரத்தில் கேத்துரெட்டிப்பட்டி, புட்டிரெட்டிப்பட்டி, வேப்-பிலை பட்டி, ஆத்துார் என,
20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.இக்கிராம மக்களுக்கு தேவையான பண பரிவர்த்தனைக்கு, தேசிய வங்கிகளோ, தனியார்
வங்கிகளோ இப்பகுதியில் இல்லை. வங்கிகளுக்கு செல்ல வேண்டுமானால், ராமியன-ஹள்ளி,
பொம்மிடி, கடத்துார் ஆகிய பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும். நுாற்றுக்கும் மேற்பட்ட மகளிர்
குழுக்கள், சிறு, குறு விவசாயிகள், வியாபாரிகள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஏழை எளிய மக்கள்
வங்கி கடன் பெறவும், முதலீடு செய்யவும், கடத்துார் நகரத்தை நாடி செல்லும் அவலம் தொடர்கிறது.
ஆகவே, அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில், மையபகுதியான தாளநத்தம் கிராமத்தில்
தேசிய அல்லது தனியார் வங்கிகள் தொடங்க, அந்த கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.