/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டியலில் விபரம் சரிபார்க்க வாக்காளர்களுக்கு அழைப்பு
/
பட்டியலில் விபரம் சரிபார்க்க வாக்காளர்களுக்கு அழைப்பு
பட்டியலில் விபரம் சரிபார்க்க வாக்காளர்களுக்கு அழைப்பு
பட்டியலில் விபரம் சரிபார்க்க வாக்காளர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 06, 2024 07:18 AM
அரூர்: வாக்காளர்கள் தங்களது விபரங்களை சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலமாக சரிபார்த்துக் கொள்ளலாம் என, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆக., 20 முதல் வாக்காளர் பட்டியலை, 'தேர்தல் ஆப்' மூலமாக சரிபார்க்கும் பணி, திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தவர்களை கண்டறிதல், இறந்து போன வாக்காளர்களின் விபரம், புகைப்படங்களில் மாற்றம் செய்தல், இரட்டை பதிவுகள் இருந்தால் கண்டறிந்து நீக்குதல் உள்ளிட்ட பணிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அரூர் தாலுகாவில், 66 சதவீதமும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 69 சதவீதமும் சரிபார்ப்பு பணிகள், சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்கள் பகுதிகளுக்கு வரும்போது தேவையான விபரங்களை எடுத்து கூற வாக்காளர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் உரிய ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். இப்பணி அக்., 18 வரை தொடர்ந்து நடக்கும். ஆகவே, வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது விபரங்களை, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலமாக, சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.