/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு
/
விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு
ADDED : ஜன 07, 2025 01:13 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி மாதாந்திர கூட்டம், சேர்மன் லட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி கமிஷ்னர் சேகர், துணை சேர்மன் நித்யா முன்னிலை வகித்தனர்.
இதில், கவுன்சிலர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி சாலை மற்றும் காந்தி நகர், அன்னசாகரம், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் காட்சி பொருளாக உள்ள மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
நகராட்சியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள சாலையில், ஆக்கிரமிப்புக்களை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து, குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அதற்கு சேர்மன் லட்சுமி பதிலளித்து பேசுகையில், ''தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையிலுள்ள மின் விளக்குகளின் ஒயர் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதை முழுமையாக மாற்றி, விரைந்து மின்விளக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நகராட்சியிலுள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும். குடிநீர் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்,'' என்றார்.

