ADDED : அக் 24, 2026 04:19 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் முழுவதும், நேற்று காலை பரவலாக மிதமான சாரல் மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், தமிழகத்தின், 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தி-ருந்தது. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்-நிலையில், நேற்று முன்தினம் இரவு அரூர், மொரப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்தது.நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்-டத்தில் அதிகபட்சமாக அரூர், 25 மி.மீ., மழைய-ளவு பதிவானது. மொரப்பூர், 10, பாப்பிரெட்டிப்-பட்டி, 5, நல்லம்பள்ளி, 3, ஒகேனக்கல், 3, மாரண்-டஹள்ளி, 2 என மாவட்டத்தில் மொத்தம், 48 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை மாவட்டம் முழு-வதும் பரவலாக சாலை மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்-டது.
அரூர் பகுதியில் மழை
நேற்று அதிகாலை முதல் அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்-டாரப் பகுதியில், பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. அரூரில் பஸ் ஸ்டாண்ட், நான்குரோடு, திரு.வி.க., நகர், மொரப்பூர் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்-டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
அதேபோல், தாழ்வான பகுதியில் உள்ள வயல்-களில் தண்ணீர் தேங்கியது. மழையில் நனைந்த-படி பள்ளி, கல்லுாரிக்கு மாணவ, மாணவியர் சென்றனர்.
