/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காட்டுப் பன்றி வேட்டை ரூ.1 லட்சம் அபராதம்
/
காட்டுப் பன்றி வேட்டை ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : ஆக 09, 2025 01:21 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி வனச்சரக அலுவலர் பூபதி மற்றும் வனக்காப்பாளர்கள் பாலாஜி, சக்திவேல், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் கோட்டப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காட்டில் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, காட்டுப்பன்றியை கொன்று, இறைச்சியை அறுத்துக் கொண்டிருந்த இருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டியை சேர்ந்த ரேணு, 32, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கோபால், 46, என்பதும், இவர்கள் கம்பி வலை மூலம் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன், வனத்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர், இருவருக்கும் தலா, 50,000 ரூபாய் வீதம், மொத்தம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.