ADDED : ஜூலை 28, 2026 06:06 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி, குப்பாகவுண்டர்
தெரு மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. இரு நாட்கள் நடக்கும்
விழாவில் நேற்று, பெண்கள் பால்குடம் ஏந்தி வழிபாடு நடத்தினர். குப்பம்
கவுண்டர் விநாயகர் கோவிலில் இருந்து கடை-வீதி, அவ்வையார் அரசு பள்ளி வழியாக
மீண்டும் குப்பா கவுண்டர் மாரியம்மன் கோவில் வரை பால்குட ஊர்வலம் நடந்தது.
மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜை மற்றும் அன்னதானம்
நடந்தது. கோவிலில் உபசன்னதிகள் உள்ள விநாயகர், மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
முருக பெருமா-னுக்கும் பூஜை, சிறப்பு வழிபாடு நடந்தது.
