ADDED : ஆக 17, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் சோமசுந்தரம் வேலம்மாள் அறக்கட்டளை , தமிழ்துறையும் இணைந்து படைப்புக்கலை என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் தலைமை வகித்தார். தமிழ்துறைத் தலைவர் பாண்டீஸ்வரி வரவேற்றார்.
ஓமன் நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சகம் தொழில்நுட்பம் அறிவியல் பல்கலை பேராசிரியர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். சென்னை நிகழ்நாடக மய்யம் இயக்குநர் சண்முகராக பேசினார். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியர்கள் செய்தனர். முதுகலை மாணவி பொற்கொடி நன்றி கூறினார்.