/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதுகாப்பு வளையத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம்
/
பாதுகாப்பு வளையத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம்
ADDED : ஏப் 21, 2024 04:44 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் லோக்சபா தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை மையமான ரெட்டியார் சத்திரம் அண்ணா பல்கலையில் அனைத்து மின்னணு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கு அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நுழைவு வாயில் முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், பல்கலை வளாகம் சுற்றிலும் சி.ஆர்.பி.எப்., , ஆயுதப்படை ,சட்டம் - ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 200 க்கு மேற்பட்டோர் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சீலிடப்பட்ட அறைகள் முதல் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க நுழைவு வாயில் அருகே கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அலுவலர்களும் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட தினங்களுக்கு ஒரு முறை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பூங்கொடி ஆய்வு மேற்கொள்வார். இதோடு ஓட்டு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க தனி அலுவலர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

