/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
-ரத்தான நெட் தேர்வுக்கு நாளை மறுதேர்வு
/
-ரத்தான நெட் தேர்வுக்கு நாளை மறுதேர்வு
ADDED : செப் 03, 2024 04:38 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஆக.28ல் கணினி பிரச்னையால் யுஜிசி - நெட் தேர்வு எழுத முடியாத 43 தேர்வர்களுக்கு நாளை (செப். 4) மறுதேர்வு நடக்க உள்ளது.
பல்கலை ,கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பி.எச்.டி., மாணவர் சேர்க்கைக்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை ஜூன், டிசம்பரில் நடத்தப்படும்.
இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு ஜூன் 19-ம் தேதி நடத்தப்பட்டது. முறைகேடுகள் நடைபெற்றதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமையால் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் -- வத்தலகுண்டு ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் இதற்கான தேர்வு ஆக.28 ல் நடந்தது.
60 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 43 பேர் வந்தனர். கணினி பிரச்னை காரணமாக பலர் வெளியே நிறுத்தப்பட்டனர். 19 பேர் மட்டுமே தேர்வெழுதினர். மற்ற 43 பேர் தேர்வு எழுத முடியாது ஏமாற்றத்துடன் திரும்பினர். தற்போது இவர்களுக்கு மாற்று மையம் ஏற்பாடு செய்யப்பட்டு நாளை (செப். 4) - தேர்வு நடக்கிறது. இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு இணையதளம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.