/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள் ; வாக்குவாதம் ,எதிர்ப்பு

ADDED : ஜூலை 12, 2024 05:14 PM
திண்டுக்கல்: கள்ளிமந்தையம் -ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தபட்ட 16 பேருக்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்த நிலையில் ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுக்காது வாக்குவாதத்தில் ஈடுபட நீதிமன்ற ஊழியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் நெடுஞ்சாலை பணிக்காக கள்ளிமந்தையத்தை சேர்ந்த 16 பேரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இழப்பீடு வழங்கவில்லை. இதனால் 2018ல் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிபதி 16 பேருக்கு இழப்பீடு தொகையாக ரூ.132 கோடி வழங்க உத்தரவிட்டார்.இதுவும் ஆண்டுகள் கடந்தும் வழங்கவில்லை. 2022ல் மீண்டும் மனு செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் நீதிமன்ற ஊழியர்கள்,வழக்கறிஞர்கள் வேணுகோபால்,உதயநிதி உள்ளிட்டோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்கும் அலுவலக ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக அலுவலர்கள் ஜப்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க , நீதிமன்ற ஊழியர்கள் துணை கலெக்டர் காரின் மீது நோட்டிஸ் ஒட்டி விட்டு விரைவில் போலீசார் பாதுகாப்புடன் ஜப்தி செய்ய வருவோம் எனக்கூறி சென்றனர்.