/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பருவ நிலை மாற்றம் விழிப்புணர்வு ஊர்வலம்
/
பருவ நிலை மாற்றம் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 23, 2024 05:06 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., கலை கல்லுாரியில் 3 நாள் நடக்கும் பன்னாட்டு கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் 5 கிலோமீட்டர் வரை சென்று நந்தவனபட்டியில் முடிந்தது. கல்லுாரி தாளாளரும் செயலருமான ரெத்தினம்,கல்லுாரி இயக்குனர் துரை ரெத்தினம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி தொடங்கி வைத்தார். மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் குணசேகரன் பேசினார். சுற்றுச் சூழல் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பன்னாட்டுக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் லோகு,அமெரிக்க ஹேர்யாட் வாட் பல்கலை.,பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து,பேராசிரியர்கள் கண்ணன், ஜெயராம், அருண், ராஜா, ஊடகப் பிரிவு காதர் பங்கேற்றனர்.