ADDED : ஆக 09, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் ஸ்ரீராம புரம் ஊராட்சி மண்டபம் புதுார் கருப்பணசுவாமி கோவில் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி தலைமை வகித்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் முருகன் வரவேற்றார். எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரி, தாசில்தார் சரவணகுமார், பி.டி.ஓ., க் கள் சரவணன், முத்துக்குமார், ஊராட்சித் தலைவர்கள் தட்டாரப்பட்டி சத்தீஸ்வரி, நத்தப்பட்டி சந்தியா, அம்மாபட்டி ரங்கராஜ், தி.மு.க., நிர்வாகிகள் கார்த்தி, நாகப்பன், மருதபிள்ளை, வேல்முருகன், மாரிமுத்து பங்கேற்றனர்.