/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்ணுக்கு டெங்கு கொசு ஒழிப்பு தீவிரம்
/
பெண்ணுக்கு டெங்கு கொசு ஒழிப்பு தீவிரம்
ADDED : ஆக 02, 2024 06:25 AM
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் பெண்ணுக்கு டெங்கு பாதித்த நிலையில் மருந்து தெளிப்பு என கொசு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.
சின்னாளபட்டி காமாட்சி நகரில் பெண் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து நேற்று பூச்சியியல் வல்லுனர் விஜயா, சுகாதார ஆய்வாளர் கணபதி முன்னிலையில கொசு ஒழிப்பு பணிகள் நடந்தது.
போக்கிங் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கப்பட்டது.
இது தவிர தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கொசு முட்டை ஒழிப்பு, பிளீச்சிங் பவுடர் துாவுதல் உள்ளிட்ட தொற்று தடுப்பு பணிகள் நடந்தது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, திருவள்ளுவர் சாலை, சவுராஷ்டிரா காலனி, என்.சி.சி., ரோடு உள்ளிட்ட இடங்களில் கொசு கட்டுப்படுத்துதல், டெங்கு, வைரஸ் பரவலை தடுக்கும் பணிகள் முடுக்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.