/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதியத்திற்கு பின்ஆப்சென்ட் ஆகும் டாக்டர்கள் செவிலியர்கள் சிகிச்சையளிக்கும் அவலம்

ADDED : மார் 03, 2025 03:53 AM
கொடைக்கானல் : - கொடைக்கானல் மன்னவனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் ஆப்சென்ட் ஆவதால் செவிலியர்கள் சிகிச்சையளிக்கும் அவலம் தொடர்கிறது.
மேல்மலை பகுதியான மன்னவனுாரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு நியமிக்கப்பட்ட டாக்டர்கள் காலை 10:00 மணிக்கு வந்து மதியம் 2:00 மணிக்கு சென்று விடுகின்றனர்.
மதியம், இரவில் சிகிச்சையளிக்க டாக்டர்கள் இல்லாத நிலையில் அவசர சிகிச்சையை செவிலிலியர்கள் மேற்கொண்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அனுப்பும் அவலம் உள்ளது. சில நேரங்களில் செவிலியர்களும் இல்லாத நிலையில் 108 பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் சூழல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.