/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதலிடம் என கூறதான் முடியும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நக்கல்
/
முதலிடம் என கூறதான் முடியும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நக்கல்
முதலிடம் என கூறதான் முடியும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நக்கல்
முதலிடம் என கூறதான் முடியும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நக்கல்
ADDED : ஏப் 20, 2024 05:52 AM
திண்டுக்கல்: ''ஜூன் 4 வரை அந்தந்த கட்சியினர் கருத்துக்கணிப்பில் முதலிடம் பிடிப்பதாக கூறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்,'' என அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்
திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு கலை அறிவியல் கல்லுாரி ஓட்டு சாவடியில் ஓட்டு செலுத்திய அவர் கூறியதாவது: சண்டை சச்சரவு,ஈகோ இல்லாமல் தேர்தல் நல்லபடியாக முடிந்தது.
மூன்று ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை. திண்டுக்கல் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எம்.எல்.ஏ., வாக இருந்தபோது அடிப்படை வசதி கூட ஏற்படுத்தவில்லை. தொகுதியில் அடிப்படை வசதி இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலைஉள்ளது.