/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற தீர்மானம்
/
வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற தீர்மானம்
ADDED : ஜூன் 26, 2024 06:51 AM
வத்தலக்குண்டு : வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார் செயல் அலுவலர் சந்தனம்மாள் வரவேற்றார். தலைமை எழுத்தர் முருகேசன் தீர்மானங்களை வாசித்தார்.
சிறிய பாலங்கள், பேவர் பிளாக் ரோடு அமைப்பது, வத்தலக்குண்டு ஆடுசாபட்டி ரோட்டில் அயன்கோவில்பட்டி செல்லும் வண்டிப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க., நகர செயலாளர் சின்னதுரை, கவுன்சிலர்கள் சிவகுமார், ரவிச்சந்திரன், மணிவண்ணன், சுமதி, சியாமளா, மாரியம்மாள், பிரியா, ராமுத்தாய், அழகு ராணி, சைதத் நிஷா பங்கேற்றனர். உதவி தலைமை எழுத்தர் அம்மாமுத்து நன்றி கூறினார்.