/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
--குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி
/
--குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி
--குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி
--குடிநீர்,தெருவிளக்கு,ரோடு இல்லாத சீவல்சரகு ஊராட்சி
ADDED : ஜூன் 28, 2025 11:42 PM

சின்னாளபட்டி: ரோடு, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால்சீவல்சரகு ஊராட்சி மக்கள் அவதியுறுகின்றனர்.
ஆதிலட்சுமிபுரம், சுதனாகியபுரம், ஜே.புதுக்கோட்டை, பொம்மனம்பட்டி, ம.போ.சி., நெசவாளர் காலனி, கமலாநேரு நெசவாளர் காலனி, சமத்துவபுரம், புதுக்கோடாங்கிபட்டி, குமரன் நகர் உள்பட 12க்கு கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் 2013 அ.தி.மு.க., ஆட்சியின் போது கைத்தறி நெசவாளர்களுக்காக 200 பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜே.புதுக்கோட்டை அருகே 190 வீடுகளும், அம்பாத்துறையில் 10 வீடுகளும் கட்டப்பட்டன. இதில் வீடு இல்லாத ஏழை நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய பசுமை வீடுகள் முறைகேடாக வணிக நோக்கத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. பயனாளிகள் தேர்வில் முறைகேடுகள் புகார் எழுந்தபோதும் அதிகாரிகள், அரசியல் தலையீடு காரணமாக இப்பிரச்னை கண்டு கொள்ள வில்லை. பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசிப்போர் போதிய அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்டு வருகின்றனர். தெருவிளக்கு, சுகாதாரம் சார்ந்த அடிப்படை பிரச்னைகள், கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளற்ற சூழலில் இங்கு வசிப்பதே சவாலான சூழலை ஏற்படுத்தி வருகிறது.பலர் வீடுகளை காலி செய்து, சின்னாளபட்டி, ஜே.புதுக்கோட்டை, ஆதிலட்சுமிபுரம் உள்ளிட்ட அருகாமை பகுதிகளில் வாடகைக்கு குடியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தெருவிளக்கு இன்றி இரவு நேரங்களில் நெசவாளர்கள் குடியிருப்பு விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ஜே.புதுக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாததாலும் தரைப்பகுதி சேதமடைந்து பெயர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு காயம் ஏற்படும் சூழல் உள்ளது. பலர் குழந்தைகளை அனுப்ப தயங்குகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமங்களிலும் அடிப்படை தேவைகள் கிடைப்பதில் பெரும் சிரமம் நீடிப்பதாக குமுறுகின்றனர்.
--பயன்படுத்த முடியாத குடிநீர்
என்.சக்திவேல், நெசவு தொழிலாளி, ம.பொ.சி., காலனி : 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்கின்றனர். அதை குடிக்க பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. தினமும் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. நெசவு செய்வதன் மூலம் கிடைக்கும் கூலிப்பணத்தில் வாரந்தோறும் 300 ரூபாய்க்கு மேல் குடிநீருக்காக மட்டுமே செலவு செய்து வருகிறோம். ரோடு சேதமடைந்துள்ளதால் நெசவு பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.
உரிமை தொகை கிடைக்கல
முத்து, கூலி தொழிலாளி, நெசவாளர் காலனி : நெசவாளர்கள் மட்டுமின்றி கூலித்தொழிலாளர்களும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சிரமத்தில் உள்ளனர். எந்த ஒரு நலத்திட்டமும் இப்பகுதியில் முறையாக நிறைவேற்றப்படுவது இல்லை. பலமுறை முதியோர் உதவித் தொகை உட்பட அரசு நலத்திட்டங்களுக்கு மனு கொடுத்த போதும் நடவடிக்கையின்றி கிடப்பில் விட்டு விடுகின்றனர். தெருவிளக்குகள் பற்றாக்குறையாக உள்ளது. பெண்கள் பலருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை.