நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : கள்ளர் சீரமைப்பு ,ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்க கூடாது என வலியுறுத்தி அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் முன்பு மவுன விரத போராட்டம் நடந்தது.
பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார் . பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம், அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். அணைப்பட்டி பிரிவிலிருந்து ஆஞ்சநேயர் கோயில் வரை மவுன ஊர்வலம் நடத்தி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொள்கை பரப்புச் செயலாளர் ராஜேந்திரன், தன்னார்வலர் பாக்கியம் பங்கேற்றனர்.

