ADDED : மே 09, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிளிக்கை: வேடசந்துார் சேனாண்கோட்டையை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் அருண்குமார் 15. கோவை தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார்.
இவர் விடுமுறைக்காக ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை 5:00 மணி அளவில் தாய் முத்துலட்சுமியுடன் காப்பிலியபட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். முத்து லட்சுமி துணி துவைத்துக் கொண்டிருந்த போது குளத்தில் குளித்து கொண்டிருந்த அருண்குமார் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார்.
ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.