நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் சிறுவர்களுக்கான ஹாக்கி பயிற்சி முகாம் ,விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
என்.ஜி.ஓ., காலனி பாரதி வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளியில் நடந்த இதில் பள்ளி தாளாளர் இளம் பாரதி தலைமை வகித்தார். ஹாக்கி அகாடமி பயிற்சியாளர் ஞானகுரு முன்னிலை வகித்தார். மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன், தி.மு.க., கிழக்கு பகுதி செயலர் ராஜேந்திரகுமார், மாவட்ட நெட்பால் சங்க துணைத் தலைவர் சாதீக் உபகரணங்கள் வழங்கினர். பள்ளி முதல்வர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.