ADDED : ஆக 17, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி : தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சன அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருவிளக்கு பூஜை, மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சின்னாளப்பட்டி தேவி கருமாரியம்மன் கோயில், பால நாகம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில், வரலட்சுமி நோன்பு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனைகள் நடந்தது.-பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

