/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி
/
கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி
ADDED : ஏப் 21, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், கஸ்பா அய்யலுாரை சேர்ந்தவர் நாட்ராயன், 52. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அரிசி மூட்டையுடன் கூலி தொழிலாளி பழனிசாமி, 30, என்பவருடன் குருந்தம்பட்டிக்கு ஆட்டோ ஓட்டிச் சென்றார்.
கெங்கையூர் சென்ற போது ஆட்டோ, ரோட்டோர கிணற்றில் விழுந்து முழ்கியது.
நேற்று காலை அப்பகுதியினர் பார்த்த போது, நாட்ராயன் உடல் மிதந்தது. வேடசந்துார் தீயணைப்பு வீரர்கள் ஆட்டோவுடன் இருவரது உடல்களையும் மீட்டனர்.
வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

