/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேளாங்கண்ணி கடலில் குளித்த மாணவர்கள் 2 பேர் பலி
/
வேளாங்கண்ணி கடலில் குளித்த மாணவர்கள் 2 பேர் பலி
ADDED : ஆக 12, 2024 11:45 PM

நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி மகன் வீரமலை 13. காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மகன் விஷ்வா 12.
இருவரும் சிலுக்குவார்பட்டி தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்தனர். நிலக்கோட்டை தனியார் சிலம்பாட்ட பயிற்சி கூடத்தில் சிலம்பம் கற்று வந்தனர். இருவரும் வேளாங்கண்ணியில் நடந்த மாநில சிலம்பாட்ட போட்டிக்கு 50க்கு மேற்பட்ட மாணவர்களுடன் சென்றனர்.
ஆக., 11ல் வேளாங்கண்ணி கடலில் 2 பேரும் குளித்த போது அலையில் சிக்கி இறந்தனர். கொங்கப்பட்டி, காமாட்சிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வேளாங்கண்ணி சென்று இருவர் உடலையும் பிரேத பரிசோதனைக்கு பின் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.

