/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பணம் வைத்து சூதாடிய 31பேர் கைது: ரூ.11 லட்சம் பறிமுதல்
/
பணம் வைத்து சூதாடிய 31பேர் கைது: ரூ.11 லட்சம் பறிமுதல்
பணம் வைத்து சூதாடிய 31பேர் கைது: ரூ.11 லட்சம் பறிமுதல்
பணம் வைத்து சூதாடிய 31பேர் கைது: ரூ.11 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 07, 2025 04:40 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அலக்குவார்பட்டியில் வீட்டில் பணம் வைத்து சூதாடிய 31 பேரை கைது செய்த போலீசார் , அவர்களிடமிருந்து ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் அலக்குவார்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு செல்ல ஏராளமானோர் வீட்டிற்குள் அமர்ந்தப்படி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அங்கிருந்த 31 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் செயல்படும் சீட்டாட்ட கிளப்புகளை ஆய்வு செய்து அனைத்தையும் முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.