/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் ஒரே நாளில் 312.20 மி.மீ., மழை: 3 முறை 100 மி.மீ., கடந்த மழையளவு

ADDED : மே 17, 2024 06:26 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த கனமழையில் ஒரே நாளில் 312.20 மி.மீ., பதிவாகியுள்ள நிலையில், 12 நாட்களில் 3 முறை 100 மி.மீ., ஐ தாண்டி பதிவாகி உள்ளது.
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. அதே நேரத்தில் மே 4 ல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியது. கோடை மழை குளிர்விக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. அதற்கேற்றாற்போல் மே 5 முதலே மழை பெய்யத் தொடங்கியது. அன்று 128.90 மி.மீ., மழை பதிவானது.
அன்று முதல் மாலை ,இரவு நேரங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வழக்கம் போல் சுட்டெரித்தாலும் மதியம் ஒரு மணிக்கு மேல் வானிலை மேகமூட்டமாக மாறி குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை இருந்து வருகிறது.
நேற்று முன் தினம் இரவு 7 :00மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை 1.30 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டித்தீர்த்தது. நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையின் அளவு 312.20 மி.மீ., ஆகும். இதுவே இவ்வாண்டில் பெய்த அதிகபட்ச மழையளவு. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கி தற்போது வரையிலான 12 நாட்களில் 3 முறை 100 மி.மீ., ஐ கடந்து மழை பதிவாகியிருக்கிறது.