/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒப்புதல் பெறாமலே டெண்டர் விவகாரம் 4 பேர் 'சஸ்பெண்ட்'
/
ஒப்புதல் பெறாமலே டெண்டர் விவகாரம் 4 பேர் 'சஸ்பெண்ட்'
ஒப்புதல் பெறாமலே டெண்டர் விவகாரம் 4 பேர் 'சஸ்பெண்ட்'
ஒப்புதல் பெறாமலே டெண்டர் விவகாரம் 4 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 03, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜூலை 25ல், 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர், ஒப்புதல் பெறாமல் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தனிச்சையாக செயல்பட்டு அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.
இதற்கு உடந்தையாக இருந்து அனுமதி அளித்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிதேவி, கணக்காளர் சிவக்குமார், உதவியாளர் கனகலட்சுமி ஆகிய நால்வரை 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார். இதோடு அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டன.