/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலைஞர் கனவு திட்டத்தில் வீடு கட்ட ரூ.5 லட்சம் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ADDED : ஆக 12, 2024 05:03 AM

-வடமதுரை : ''கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் அரசு உதவி கிடைக்கும்'' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
வடமதுரையில் நடந்த விழாவில் 165 பேருக்கு வீடு கட்ட பணி உத்தரவு வழங்கிய அவர் பேசியதாவது:
கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிக்கு ரூ.3.50 லட்சத்துடன், அக்குடும்பத்தில் சுய உதவி குழு உறுப்பினர் இருந்தால் ரூ.50 ஆயிரம், மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் ரூ.ஒரு லட்சமும் கடன் வழங்கப்படும்.
இதனால் பயனாளிகள் அதிக சிரமமின்றி வீடு கட்டலாம் என்றார்.
மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி தலைமை வகித்தார். வேடந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், மகளிர் திட்ட அலுவலர் சதீஸ்பாபு, ஒன்றிய தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
பி.டி.ஓ.,க்கள் நளினா, சுப்பிரமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, கவிதா, வீராசாமிநாதன், நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், பேரூராட்சி தலைவர் நிருபாராணி பங்கேற்றனர்.