/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் தீப்பற்றி எரிந்த கார்
/
திண்டுக்கல்லில் தீப்பற்றி எரிந்த கார்
ADDED : ஜூலை 23, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பழைய கரூர்ரோடு என்.எஸ்.நகரை சேர்ந்தவர் முத்தையா62. திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு நேற்று காலை காரில் வீட்டிற்கு வந்தார்.
காரிலிருந்து இறங்கியபோது திடிரென தீப்பற்றி எரிந்தது.
அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். அதற்குள் திண்டுக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் அணைத்தனர். கார் முழுவதும் எரிந்தது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.