/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
/
திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
ADDED : ஆக 25, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைது செய்து 1100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் பேகம்பூர் நேருஜிநகரை சேர்ந்தவர் நாகராஜன்51. சுற்றுப்பகுதி மக்களிடையே குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி மாடு வளர்ப்போரிடம் அவ்வப்போது விற்பனை செய்தார்.
மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் நாகராஜன்,வீட்டில் சோதனை நடந்தது.
அங்கு மூடைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜனை கைது செய்தனர்.