/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் ஆடிக்கார்த்திகை வழிபாடு
/
முருகன் கோயில்களில் ஆடிக்கார்த்திகை வழிபாடு
ADDED : ஜூலை 30, 2024 05:44 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் ஆடிக்கார்த்திகையை யொட்டி நடந்த வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர்.வி. நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முகம் முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர் சிவசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் அஷ்டோத்திர பூஜை நடந்தது. உற்ஸவர் வள்ளி, தேவசேனா சமேத முருகனுக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கன்னிவாடி தர்மத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயிலிலும் ஆடி கார்த்திகை சிறப்பு பூஜைகள் நடந்தது.
* பழநி முருகன் கோயிலில் அபிஷேகம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடைபெற்றது.இதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
சாரல் மழையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திரு ஆவினன்குடி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடந்தது. சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை் நடந்தது.தொடர்ந்து கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னிதியிலும் கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது.