/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோர வளைவு பள்ளத்தால் தொடரும் விபத்து
/
ரோட்டோர வளைவு பள்ளத்தால் தொடரும் விபத்து
ADDED : மார் 07, 2025 06:59 AM

ரோட்டில் ஒடும் குடிநீர் : பழநி கிழக்கு பாட்டாளி தெரு ரோட்டில் குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது.இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கின்றனர் .இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--விஜயகுமார் பழநி.
வளைவில் பள்ளம் : எரியோடு அரசு மாணவர் விடுதி அருகில் ரோடு வளைவில் இருக்கும் பள்ளத்தில் டூவீலர்கள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றன. பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ---
-மணி, எரியோடு.
குப்பையை கொட்டி தீ : பழநி பைபாஸ் ரோடு கோயில் பூங்கா அருகே குப்பையை ரோட்டோரங்களில் கொட்டி தீ வைப்பதால் புகை மண்டலம் ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்படுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-முருகேசன், பழநி.
தேவை ஒளிரும் பட்டை : பழநி புது தாராபுரம் ரோடு ரயில்வே கேட் டிவைடரில் ஒளிரும் பட்டை இல்லாததால் விபத்துக்கள் நடக்கிறது. டிவைடரில் ஒளிரும் பட்டை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை வேண்டும்.
-எஸ்.மோகன், பழநி.
சேதமான மீட்டர் பெட்டி : திண்டுக்கல் என். எஸ் நகர். மின்கம்பத்தில் உள்ள மீட்டர் பெட்டி சேதமடைந்த நிலையில் தாழ்வாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது .மீட்டர் பெட்டியை மேலே உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்தி, என்.எஸ்.நகர்.
குப்பையால் சுகாதாரக்கேடு : சத்திரப்பட்டியில் ஒட்டன்சத்திரம் ரோட்டில் குப்பையை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆங்காங்கே சிதறியும் கிடக்கிறது. குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
-ஆனந்தன், ஒட்டன்சத்திரம்.
கழிவுநீரால் கொசுக்கள் : ----------பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெருவில் சாக்கடையை துார் வாராமல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது .துர்நாற்றமும் வீசுகிறது.இதை கருதி சாக்கடையை துார் வார வேண்டும்.
-முத்துக்குமார் பழநி.