/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இயந்திர பயன்பாடுகள் இருந்தால் நடவடிக்கை
/
இயந்திர பயன்பாடுகள் இருந்தால் நடவடிக்கை
ADDED : மார் 06, 2025 03:48 AM
கொடைக்கானல்: ''கொடைக்கானல் மலைப்பகுதியில் மண்வளம்,இயற்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் இயந்திர பயன்பாடு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என,ஆர். டி.ஓ., திருநாவுக்கரசு கூறினார்.
அவர் கூறியதாவது: சுற்றுலா தலமாக உள்ள கொடைக்கானலில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வணிக ரீதியாக மண்வளம், இயற்கை சிதைக்கப்படுவதாக புகார் உள்ளது.
இயந்திர பயன்பாடுகள் பாறை தகர்ப்புக்கு ஏற்கனவே தடை உள்ளது. தற்போதைய சூழலில் அனுமதியற்ற இயந்திர பயன்பாடுகள் நடக்கின்றன. இதன் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்தால் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும்.
கொடைக்கானலில் தொடரும் நிலம் சம்பந்தமான குளறுபடிகளுக்கு வருவாய்த்துறை கோப்புகள் ஆய்வுக்குட்படுத்தி வருவாய்த்துறை ஆவணங்கள், நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் புனரமைக்கப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்படும்.
டி.கே.டி. நிலம் சம்பந்தமாக அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படும். வருவாய்த்துறை சம்பந்தமான மனுக்கள் தாமதமின்றி 3 நாட்களில் தீர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.