/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் கேமராக்கள்
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் கேமராக்கள்
ADDED : மே 12, 2024 04:19 AM
திண்டுக்கல்: ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள், யூ.பி.எஸ்., பேட்டரிகள் இருப்பு வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
லோக்சபா தேர்தல் ஏப். 19 ல் முடிந்த நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அண்ணா பல்கலை கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சட்டசபை தொகுதிகள் வாரியாக 6 அறைகளில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் மையம் முழுவதும் 283 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 2 கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதன் பணியை கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் ஒரு சில லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதானநிலையில் கண்காணிப்பு கேமராக்கள், யூ.பி.எஸ். பேட்டரிகள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் தொழில்நுட்ப பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இதை கண்காணிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் 4 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.