/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., அடையாள அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., அடையாள அட்டை வழங்கல்
ADDED : செப் 14, 2024 05:22 AM
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை , உறுப்பினர்கள் உரிமை அட்டை வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடந்தது.
எம்.எல்.ஏ., தேன்மொழி சேகர், முன்னாள் எம்.பி., உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி முன்னிலை வகித்தனர். அம்மையநாயக்கனுார் நகரச் செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர் சேகர், பொருளாளர் சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் முஸ்தபா, ஒன்றிய எம்.ஜி.ஆர் .இளைஞர் அணி செயலாளர் முனியப்பன், மாவட்ட பிரதிநிதி சேசுராஜ், மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் கனிக்குமார்,ஒன்றிய அவைத் தலைவர் தவமணி,நகர அவைத்தலைவர் மகாராஜன் கலந்து கொண்டனர்.