/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., புதிய ஒன்றிய செயலாளர்கள்
/
அ.தி.மு.க., புதிய ஒன்றிய செயலாளர்கள்
ADDED : மார் 06, 2025 03:50 AM
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளராக மோகன் இருந்தார். அவர் சமீபத்தில் கட்சி விதிகளை மீறி அ.தி.மு.க., மீட்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்ததால் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அந்த இடம் காலியாக இருந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் செயல்பாடின்றி இருந்ததால் அவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதனுக்கு சென்றது.
பாண்டியன், மாவட்ட செயலாளர் பரிந்துரையின் படி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இரு பதவிகளுக்கும் முறையே முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னகளஞ்சியம், ஒன்றிய மாணவர் அணி செயலாளராக இருந்த சுதாகர், ஒன்றிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.