sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீட்டுச் சிறையிலிருந்த நிர்வாகியை அழைத்து சென்ற மார்க்சிஸ்ட் எம்.பி., பெண் போலீசை தள்ளிய அராஜக வீடியோ வைரல்

/

வீட்டுச் சிறையிலிருந்த நிர்வாகியை அழைத்து சென்ற மார்க்சிஸ்ட் எம்.பி., பெண் போலீசை தள்ளிய அராஜக வீடியோ வைரல்

வீட்டுச் சிறையிலிருந்த நிர்வாகியை அழைத்து சென்ற மார்க்சிஸ்ட் எம்.பி., பெண் போலீசை தள்ளிய அராஜக வீடியோ வைரல்

வீட்டுச் சிறையிலிருந்த நிர்வாகியை அழைத்து சென்ற மார்க்சிஸ்ட் எம்.பி., பெண் போலீசை தள்ளிய அராஜக வீடியோ வைரல்


ADDED : பிப் 28, 2025 01:16 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி மேட்டுக்கடையில் சென்னை போராட்டத்திற்கு செல்ல முயன்றதாக வீட்டுச்சிறையில் வைத்திருந்த மாதர் சங்க நிர்வாகியை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அத்துமீறி தன் காரில் அழைத்து சென்றார் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., சச்சிதானந்தம். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தலைமை செயலகம் நோக்கி ஊர்வலம் நடக்கிறது. இதில் சாணார்பட்டி மேட்டுக்கடை மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாப்பாத்தி பங்கேற்கயிருந்தார். போலீசார் நேற்று அவரை வீட்டுச்சிறையில் வைத்தனர்.

இதுகுறித்து அவர் கட்சியினரிடம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் கட்சியினருடன் பாப்பாத்தி வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாப்பாத்தி எம்.பி., உடன் செல்லமுயன்றபோது அதை தடுத்த பெண் போலீஸ் கையை பிடித்து எம்.பி., தள்ளிவிட்டதாக போலீசார் குற்றம்சாட்டினர். தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எம்.பி., சச்சிதானந்தம் காரில் ஏறி முயன்ற பாப்பாத்தியை தடுத்த ஏட்டை கட்சி நிர்வாகி ஒருவர் தள்ளிவிட்டப்படி கையால் குத்த முயன்றார். அங்கும் வாக்குவாதம் ஏற்பட அத்துமீறிய எம்.பி., பாப்பாத்தியை காரில் அழைத்து செல்ல போலீசார் செய்வதறியாது தவித்தனர்.

போராட்டத்திற்கு அனுமதி


திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் கூறியதாவது: சென்னையில் நடக்கும் போராட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் பாப்பாத்தியை போலீசார் வீட்டுச்சிறையில் வைத்தனர். நான் எஸ்.பி., பிரதீப்பிடம் அலைபேசியில் பேசினேன். சில மணி நேரங்கள் கழித்தும் பாப்பாத்தி விடுவிக்கப்படவில்லை. நத்தம் சேர்வீடு பகுதி நிகழ்ச்சிக்கு சென்ற நான் பாப்பாத்தியை சந்திக்க சென்றேன். அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு பாப்பாத்தியை காரில் அழைத்து வந்தேன். போலீசார் காரை மறித்தனர் என்றார்.

மோதல் நடக்கவில்லை


எஸ்.பி., பிரதீப் கூறியதாவது: முதலில் சென்னையில் முற்றுகைப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை. அதற்காக சாணார்பட்டி மேட்டுக்கடை பகுதியில் உள்ள மாதர் சங்க நிர்வாகி பாப்பாத்தி, வீட்டில் போலீஸ் காவல் வைத்திருந்தோம். பிறகு வேறு இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கொடுத்தவுடன் போலீஸ் காவலை எடுத்துக்கொண்டோம். மற்றபடி எந்த மோதலும் நடக்கவில்லை என்றார்.






      Dinamalar
      Follow us