ADDED : ஆக 15, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை ஏற்படுத்தும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை அமைச்சர் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப், ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார்கள் சசி, பழனிச்சாமி, முருகேசன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நாட்டு நலம் பணித்திட்ட தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ், செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன் கலந்து கொண்டனர்.